மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு 2015 செப்டம்பர் 21ஆம் திகதியிட்ட 1933/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்டது.வர்த்தமானி அறிவித்தல்களின் பிரகாரம் அமைச்சின் பணிப்பாணைக்கு உட்படுத்தப்பட்ட செயற்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன:

  • கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்திட்டங்கள் என்பவற்றை அமைத்தல், மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி சம்பந்தப்பட்ட விடயங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் கண்காணித்தல் மற்றும் அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் வருகின்ற திணைக்களங்கள், நியதிச்சட்ட நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் என்பவற்றின் விடயங்கள்.
  • கொட்டாவ, கடுவெல மற்றும் கடவத்தை நகர அபிவிருத்தி கருத்திட்டங்கள் மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள்.
  • நகர பிரதேசங்களில் பொருளாதார, சமூக மற்றும் பௌதிக அபிவிருத்தியை ஒழுங்குமுறைப்படுத்தி முறையாக மேம்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
  • நகர திண்ம கழிவு முகாமைத்துவம்.
  • தாழ் நிலப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் மீட்டல் என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள்.
  • பொதுவான திட்டத்திற்கு அமைவாக சதுப்பு நிலங்களையும் சேவைகளும் வசதிகளும் குறைந்த மட்டத்தில் இருக்கின்ற நகர பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு உரிய வழிகாட்டல்களை வழங்குதல்.
  • தேசிய பௌதிக திட்டங்களையும் பிராந்திய பௌதிக திட்டங்களையும் தயாரித்தல்.
  • ஒருங்கிணைக்கப்பட்ட நகர அபிவிருத்தியில் தேசிய பௌதிக திட்டங்களின் அடிப்படையில் அனைத்து நிர்மாண பணிகளையும் ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்.
  • அமைச்சின் விடயப்பரப்புக்குள் வருகின்ற நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து விடயங்களுடன் தொடர்புடைய விடயங்கள்.
  • அமைச்சின் விடயப்பரப்புக்குள் வருகின்ற நிறுவனங்களை மேற்பார்வைசெய்தல்.

வியாபாரம், தொடர்பாடல் மற்றும் நிர்வாக மையமாகவுள்ள 8 மில்லியன் மக்களுக்கு மேல் வாழ்கின்ற இலங்கையின் மேல் மாகாணத்தை பாரிய நகரமாக அபிவிருத்தி செய்வது அமைச்சின் நோக்கமாகும். இதற்காக, இந்த மாகாணத்தில் உட்கட்டமைப்பு, நீர், வடிகால், மின்சாரம், வீடமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கான கட்டிடங்கள், சமூக மற்றும் சமய நடவடிக்கைகள், கல்வி நிறுவனங்கள், சுகாதார சேவைகள், போக்குவரத்து மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

FaLang translation system by Faboba